Connect with us

உச்சகட்ட பரபரப்பு!! மீண்டும் இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்சே!!

gotabaya rajapaksa3 6004 1573967523 1657376176

செய்திகள்

உச்சகட்ட பரபரப்பு!! மீண்டும் இலங்கை திரும்பிய கோத்தபய ராஜபக்சே!!

இலங்கையில் கடந்த சில  மாதங்களாகவே கடும் பொருளாதர நெருக்கடி நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாடு தப்பிச்சென்றதாக கூறப்பட்டது.

குறிப்பாக மாலத்தீவு, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு தப்பிச்சென்றார். இந்த சூழலில் கொழும்பில் உள்ள கட்டுநாயக பண்டார நாயக சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதி போராட்டத்தின் உச்சகட்டமாக அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதையடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச, ஜூலை 13-ஆம் தேதி மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார்.

மறுநாள் சிங்கப்பூர் சென்றடைந்த அவர், அங்கிருந்தபடி இலங்கை அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர், ஆகஸ்ட் 11-ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து அவர் தாய்லாந்துக்குச் சென்றார்.

கடந்த 3 வாரங்களாக தாய்லாந்தில் தங்கியிருந்த கோத்தபய ராஜபக்சவின் பாதுகாப்பை இலங்கை அரசு உறுதி செய்ததை அவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top