மீண்டும் கிடைத்தது காங்கிரஸ்க்கு மக்கள் ஆதரவு! ஆளுங்கட்சியை பின்னுக்கு தள்ளிய தேர்தல் முடிவுகள்!!

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு மிகப்பெரிய வலிமையான கட்சியாக காணப்பட்டது காங்கிரஸ் ஆட்சி. ஆனால் காலங்கள் செல்ல செல்ல பல கட்சிகளின் வருகையின் காரணமாக காங்கிரஸ் கட்சியின் மீது பலருக்கும் நம்பிக்கை இழந்து காணப்பட்டது.

அதற்கு பதில் கூறும் வண்ணமாக சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தலில் பெருவாரியான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. அதனால் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இதன் தொடர்ச்சியாக கர்நாடகாவில் ஆளும் கட்சியை விட காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதன்படி கர்நாடகாவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் ஆளும் கட்சியான பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 498 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக 437 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால்  காங்கிரஸின் கர்நாடகாவில் கை ஓங்கி காணப்படுகிறது. கர்நாடகாவில்  மதசார்பற்ற ஜனதா தளம் 43 இடங்களை கைப்பற்றியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment