பெரிய நெல்லிக்காய் வைத்து ஐந்தே நிமிடத்தில் நெல்லிக்காய் சாதம் ரெடி!

பெரிய நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. அந்த நெல்லிக்காய் கடித்து சாப்பிடடால் துவர்ப்பாக இருக்கும் அதன் பின் தண்ணீர் குடித்தால் இனிப்பாக இருக்கும். அந்த பெரிய நெல்லிக்காய் வைத்து ஐந்தே நிமிடத்தில் நெல்லிக்காய் சாதம் ரெடி செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் – 2 கப்

பெரிய‌ நெல்லிக்காய் – 10

காய்ந்த மிளகாய் – 4

கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி

நறுக்கிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி

கடுகு – ஒரு தேக்கரண்டி

பெருங்காயம் – கால் தேக்கரண்டி

எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

கறிவேப்பிலை – கையளவு

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

செய்முறை:

நெல்லிக்காயை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து அதன் சதைப்பகுதியைத் துருவி அல்லது சற்று பெரியதாக நறுக்கி, அதனை மிக்ஸியில் சேர்த்து சாறு எடுத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள்.

அடிப்பகுதி கனமான கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து பொரிந்ததும் சீரகம், உளுத்த‌ம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்.

நாகர்கோவில் ஸ்பெஷல் கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு- சுட்ட அப்பளம்.. இனி நம்ம வீட்டுலயும் செய்து சாப்பிடலாமா!

இதில் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும், பெருங்காயம், நெல்லிக்காய் சாறு, மஞ்சள் தூள் சேர்த்து சாறு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். வேகவைத்த சாதத்தை, தேவையான அளவு சேர்த்துக் கிளறவும்

இப்போது நெல்லிக்காய் சாதம் ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.