மருத்துவர் எழுதிய மருந்துச்சீட்டு புரியவில்லையா? உதவுகிறது கூகுள்!

மருத்துவர்கள் எழுதிய மருந்து சீட்டு புரியவில்லை என்றால் அதற்கு கூகுள் உதவி செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் எழுதிய மருந்து சீட்டு பாமர மக்களுக்கு புரியாது என்றாலும் மருந்து கடைக்காரர்களுக்கு நிச்சயம் புரியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு சில மருத்துவர்கள் எழுதிய மருந்துச்சீட்டு மருந்து கடைக்காரர்களுக்கு புரியாமல் இருக்கும் நிலை ஏற்படும்.

இந்த நிலையில் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து உள்ள நிலையில் இதன் மூலம் மருத்துவர்கள் கையால் எழுதிய மருந்து சீட்டில் எழுத்துக்களை மிக எளிதாக அடையாளம் காண முடியும்.

google lensபுரியாமல் எழுதப்பட்ட மருந்து சீட்டில் உள்ள மருத்துவ குறிப்புகளை ஏ1 என்ற வசதி மூலம் கூகுள் லென்ஸ் இல் படம் பிடித்து, அந்த படம் டி கோட் மூலம் நமக்கு புரியும் வகையில் காட்சிப்படுத்தும். இதனால் மருத்துவர் புரியாமல் எழுதினாலும் அதை மிக எளிமைப்படுத்தி நமக்கு கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தெரியாத ஒரு தாவரம் அல்லது விலங்குகள் இருந்தால் அந்த விலங்குகள் அல்லது தாவரங்களின் புகைப்படங்களை மட்டும் பதிவு செய்தால் அது என்ன என்பது குறித்தும் கூகுள் லென்ஸ் நமக்கு புரியவைக்கும். இந்த நுண்ணறிவு வசதி அனைவருக்கும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.