மத்திய அரசின் டிஜிலாக்கர் செயலியுடன் இணையும் கூகுள்: அதிரடி அறிவிப்பு!

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் இந்தியா முறையை பின்பற்றி வருகிறது என்பதும் இதனை அடுத்து முக்கிய ஆவணங்களை சேமித்துக் கொள்ள டிஜி லாக்கர் என்ற வசதியை மத்திய அரசு சமீபத்தில் வழங்கியது என்பது தெரிந்ததே.

இந்த டிஜி லாக்கர் செயலியில் ஆவணங்கள் மற்றும் முக்கிய சான்றிதழ்களை சேமித்து வைக்கவும் பிறருக்கு பகிரவும் பாதுகாப்பான தளமாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

digilocker

இந்த நிலையில் இந்திய அரசின் டிஜிலாக்கர் சேவை உடன் கூகுள் நிறுவனத்தின் ஃபைல்ஸ் இணைக்கப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து இனி அரசால் சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள் பைல்ஸ் மற்றும் டிஜி லாக்கர் ஆகிய இரண்டின் மூலமாகவும் பாதுகாக்கவும் பகிரவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான கூகுள் 2022 என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில் இதில் பல முக்கிய கூகுள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இந்தியாவில் டிஜிட்டல் பயனாளர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையடுத்து டிஜிட்டல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது என்றும் அதனால் சைபர் பாதுகாப்பை பகுப்பாய்வில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் டிஜிலாக்கர் செயலி உடன் கூகுள் நிறுவனத்தின் பைல் செயலியை இணைப்பதன் மூலம் ஏராளமான இந்தியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.