இந்திய பயனர்களுக்கு கூகுள் ஸ்ட்ரீட் வியூ வசதி.. பயனர்கள் மகிழ்ச்சி..!

கூகுள் ஸ்ட்ரீட் வியூ என்ற அம்சம் ஏற்கனவே வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே தெரியும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ வசதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் உள்ள சிறிய நகரங்கள், கிராமங்கள் உள்பட பல பகுதிகளில் இணை கூகுள் மேப் மூலம் 360 டிகிரி கோண ஸ்ட்ரீட் வியூ பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 ஆம் ஆண்டு கூகுள் ஸ்ட்ரீட் வியூ என்ற அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த நிலையில் இந்த வசதி கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. ஆனாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த வசதி பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது பெரும்பாலான லொகேஷன்களை பார்க்கலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் செயலி என அனைத்திலும் இந்த வசதி கிடைக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த வசதியின் மூலம் பொது இடங்களை மட்டுமே பார்க்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் ஸ்ட்ரீட் வியூ 360 டிகிரி கோணத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்றும் கூகுள் மேப்ஸில் ரியல் டைம் வழிகாட்டி என்ற அம்சத்தை இப்போது பெற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை தற்போது கூகுள் சோதனை செய்து வருவதாகவும் விரைவில் இது பயனர்களை பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

கூகுள் ஸ்ட்ரீட் வியூ 360 டிகிரி வசதி இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு கிடைத்துள்ளது அடுத்து இந்திய பயனர்கள் தங்கள் விருப்பத்துக்குரிய இடத்தை இனி கூகுள் மேப்ஸ் மூலம் பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசதியை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்

கூகுள் மேப்ஸை ஓபன் செய்து, அதில் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் கூகுள் மேப்ஸில் உள்ள லேயர் அம்சத்தின் மூலம் ஸ்ட்ரீட் வியூ மோடுக்கு மாற்றி அதில் உள்ள தெருக்களில் தோன்றும் நீல நிறத்தில் கோட்டை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது நீங்கள் பின்னர் அந்த 360 டிகிரி ஸ்ட்ரீட் வியூவை காணலாம். முன் செல்வது, பின் செல்வது, பக்கவாட்டில் செல்வது உள்பட அனைத்து அம்சங்களும் இதில் உண்டு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.