சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 221 கடன் செயலிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளார். தற்போழுது செல்போன்களில் பல்வேறு விதமான செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
அவற்றில் சில கடன் செயலிகள் கடன் பெற்றுவிட்டு கட்ட முடியாமல் தாமதிப்பவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எண்களுக்கு அனுப்பி அவமானப்படுத்துவது அரங்கேறி வருகிறது.
மேலும் அடிக்கடி போன் செய்து மிரட்டுவதாகவும் புகார்கள் குவிந்தன. இதனை தொடர்ந்து விதிகளை மீறி செயல்பட்ட 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆன்லைன் லோன் ஆப்புகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக இந்த கடன் செயலிகள் மீது சைபர் கிரைம் போலிசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் சட்ட விரோதமாக செயல்பட்ட 221 கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
MR கேரள பட்டம் வாங்கிய திருநம்பியின் அதிர்ச்சி சோகக் கதை…
தற்போழுது முறைகேடாக இயங்கிய 61 லோன் ஆப்புகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பற்றி அவதூறு பரப்பிய 386 வீடியோக்களை நீக்குமாறு யூடியுப் நிர்வாகத்தை கேட்டு கொண்டுள்ளதாகவும் முகநூல் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் யூடியுப் ஆகியவற்றில் பதிவிடப்பட்ட சட்டவிரோதமான 40 வீடியோக்கள் இதுவரை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.