Google Pay சேவை மூடப்படுகிறது…ஜூன் 4க்கு பிறகு இந்தெந்த நாடுகளில் வேலை செய்யாது… காரணம் என்னவென்று தெரியுமா…?

நீங்கள் ஆன்லைன் பேமெண்ட்டுக்கு Google Payஐப் பயன்படுத்தினால், உங்களுக்கு பயனுள்ள செய்தி உள்ளது. Gpay தொடர்பாக கூகுள் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கூகுள் பே சேவையை ஜூன் 4ம் தேதி முதல் நிறுத்தப் போகிறது கூகுள்.இதன் பிறகு ஆப் மூலம் பணம் செலுத்த முடியாது.

கூகுளின் Google Pay சேவையானது இந்தியா உட்பட பல நாடுகளில் ஆன்லைன் பேமெண்ட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 2022 இல் Google Wallet அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, Gpay பயனர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான பயனர்களின் முதல் தேர்வாக இது மாறியது.

ஜூன் 4, 2024 முதல் Google Payயை Google மூடப் போகிறது. இந்தச் செய்தி ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யும் பயனர்களின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. Gpay மூடப்படும் என்ற இந்த செய்தி உண்மைதான். இதை கூகுள் நிறுவனமே உறுதி செய்துள்ளது. கூகுளின் இந்த முடிவால் எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படப் போகின்றன என்பதை இனிக் காண்போம்.

கூகுளின் இந்த முடிவு இந்தியப் பயனர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஜூன் 4, 2024 முதல் அமெரிக்காவில் கூகுள் பே சேவையை கூகுள் நிறுத்தப் போகிறது. அதாவது கூகுள் பே தடை செய்யப் போவது இந்தியாவிலிருந்து அல்ல, அமெரிக்காவிலிருந்து நிறுத்துகிறது.

ஜூன் 4க்குப் பிறகு, கூகுள் பே ஆப்ஸ் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே வேலை செய்யும். அதேசமயம் மற்ற நாடுகளில் அதன் சேவை முற்றிலும் நிறுத்தப்படும். நிறுவனத்தின் கூற்றுப்படி, அனைத்து பயனர்களும் Google Wallet க்கு மாற்றப்படுவார்கள். இந்த தேதிக்குப் பிறகு, Google Pay அமெரிக்காவில் முற்றிலும் பயனற்றதாகிவிடும்.

கூகுள் பே சேவை மூடப்பட்ட பிறகு, அமெரிக்கப் பயனர்களால் பணம் செலுத்தவோ பெறவோ முடியாது. கூகுள் அனைத்து அமெரிக்க பயனர்களையும் Google Walletக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கூகுள் வாலட்டை விளம்பரப்படுத்தவே இந்நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. சுமார் 180 நாடுகளில் Google pay ஆனது Google Wallet ஆக மாற்றப்பட்டுள்ளதாக நிறுவனம் தனது வலைப்பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews