முன்பெல்லாம் பணம் ஒருவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் குறிப்பிட்ட வங்கிக்கு வேகமாக போக வேண்டும் அங்கு சென்று வரிசையில் நின்று பணம் கட்டி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.
மக்களின் பணபரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் யுபிஐ சர்வர் கொண்டு வரப்பட்டது. யுபியையுடன் வங்கிகள் இணைந்து கொண்டதன் அடிப்படையில் கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட செயலிகள் உபயோகிக்கப்பட்டன.
மேலும் பே டிஎம் , அமேசான் பே போன்றவையும் யுபிஐடன் இணைந்து வங்கி சேவைகளை செய்து வந்தன.
இதன் மூலம் ஒருவருக்கு பணம் அனுப்புவது எளிதாக இருந்தது. இதனால் ஈஸியாக அவரவர்கள் இருந்த இடத்தில் எல்லோரும் டிரான்ஸக்ஸன் செய்து கொண்டிருந்தனர்.
இந்த யுபிஐ செயலிகள் இரண்டு மணி நேரங்கள் செயல் இழந்து இருப்பதால் பொதுமக்கள் கூகுள் பே, ஃபோன் ஃபே மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.