
தமிழகம்
சர்ச்சையில் சிக்கிய கூகுள் நிறுவனம்: எப்படி தெரியுமா?
கூகுள் நிறுவனத்தில் சாதிப்பாகுபாடு இருப்பதாக செயற்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் ஏப்ரல் மாதல் இக்குவாலிட்டி லேப் என்ற அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி செளந்தரராஜன் பங்கேற்கும் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதற்கு கூகுள் நிறுவன ஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கூகுள் நியூஸ் பிரிவு தனுஜாவிடமும் நிறுவனம் விசாரணையை மேற்கொண்டது.
அதன் தொடர்ச்சியாக அவர் பதவி விலக பிரச்சனை வெடித்தது. ஊழியர்களுக்கு இடையிலான சாதிப் பாகுபாட்டை கூகுள் நிறுவனம் ஆதரவளிப்பதாக தனுஜா குப்தா குற்றம்சாட்டியுள்ளார். அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ள இக் குவாலிட்டிலேப் இந்தியாவில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த சுந்தர் பிச்சை சாதி கட்டமைப்புகளை அறியாதவர் என்று கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
இதற்கிடையே தேன்மொழி செளந்தரராஜன் குறிப்பிட்ட சாதிக்கு எதிராக வெறுப்பு பரப்புரையில் ஈடுப்பட்டு வருபவர் என்றும் அவர் பங்கேற்கும் கருத்தரங்கால் ஊழியர்களிடை சாதி பாகுபாட்டை வித்திடமுடியும் என்று கருதியதால் நிகழ்ச்சியை ரத்து செய்ததாக கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும், பணியிடத்தில் அமைதியும் சமத்துவத்தையும் விரும்புவதாக கூகுளின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
