ரஷ்யாவுக்கு செக் வைத்த கூகுள்!! காரணம் இதுவா?
கடந்த நான்கு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை பெய்து வருவதால் இரு நாடுகளிக்கிடையே கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவன் எதிரொலியாக யூடியூப் மற்றும் முகநூலை தொடர்ந்து தற்போது கூகுள் நிறுவனமும் ரஷ்யாவுக்கு தடை விதித்துள்ளது.
ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்ய நாட்டு அரசு மற்றும் தனியார் ஊடகங்களுக்கு பேஸ்புக் விளப்பரங்கள் மூலம் வரும் அனைத்து வருமானங்களையும் அதிகாரபூர்வமாக பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.
இதேபோல் யூடியூப் இணையதளம் வாயிலாக வீடியோக்கள் மூலம் வரும் அனைத்து வருமானங்களுக்கும் தடை விதித்துள்ளது. தற்போது கூகுள் நிறுவனமும் ரஷ்யாவை சேர்ந்த விளம்பர வருமானங்களுக்கு கூகுள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
