வேலை தேடும் இளைஞர்களே உங்களுக்கான நற்செய்தி – மே 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டி மையத்தில் வரும் மே 19-ஆம் தேதி சிறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக செங்கல்பட்டு ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத் இன்று தெரிவித்தார்.

இம்முகாமில் பல தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும், பட்டதாரிகளுடன் நேர்காணல் நடத்தி, அவர்களின் தகுதிக்கு ஏற்பவும் தேவைக்கேற்ப ஆட்களை தேர்வு செய்ய படும் என தெரிவித்துள்ளார்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில், 8, 10, 12 தேர்ச்சி பெற்ற, பிஇ, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், செவிலியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அனைத்து துறையை சார்ந்த இளைஞர்களும் பங்கேற்கலாம்.

SSC-CGL தேர்வு – இலவச பயிற்சி வகுப்பில் சேர வேண்டுமா… இதோ முழு விபரம்!

இந்த முகாமில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த துறை சார்ந்த வேலைவாய்ப்பு முகாமில் பணியமர்த்தப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது,” என குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.