சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?
இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:
ஐந்தாவது முகலாயப் பேரரசர் ஷாஜகானின் 367-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம் என தெரிவித்துள்ளது.
அதன்படி, பிப்ரவரி 27, 28-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரையும், மார்ச் 1-ம் தேதி சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரையும் இலவசமாக தாஜ்மஹாலை பார்வையிடலாம் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, அன்றைய தினம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், தாஜ்மஹாலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருவதாகவுன் தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நெறிமுறைகளான பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், அனைவரும் சமூக இடைவெளி போன்ற விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் ஷாஜகானின் பிறந்தநாளையொட்டி இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. இது தவிர, உலக சுற்றுலா தினத்தன்றும் தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
