சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

அதன் படி, குற்றால அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, மெயின் அருவி போன்றவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் கடந்த 2 நாட்களாக அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

கார்த்திகை தீபம்: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!!

இந்த நிலையில் நீர் வரத்தானது தற்போது குறைந்து காணப்படுவதால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்பன் பக்தர்கள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.