திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஏழுமலையான் தேவஸ்தானத்தில் தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு விதித்தது.
இதனையடுத்து ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் 300 ரூபாய் கட்டண டிக்கெட்டுகளாக வசூலிக்கப்பட்டு வந்தது. மேலும் இலவச டிக்கெட்களுக்கும் ஆன்லைன் மூலமே வழங்கபட்டு வந்தது.
இந்த நிலையில் 22, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசாமி 2-வது சத்திரம் ஆகிய 3 இடங்களில் வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) முதல் தினமும் 10 ஆயிரம் வீதம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
