காத்துக்கொண்டிருந்த சுற்றுலாத் துறைக்கு கிடைத்த இன்பத்தகவல்; 5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு!!

கடந்த இரு ஆண்டுகளாக இந்தியாவில் சுற்றுலாத்துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக சர்வதேச சுற்றுலா தலங்கள் பாதிப்பை சந்தித்துள்ளது. ஏனென்றால் உலகில் கொரோனாவின் பரவல் தோன்றியதற்கு பின்பே பெரும்பாலும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருவதை குறைத்துக் கொண்டுள்ளனர்.

இதனால் சுற்றுலா துறைக்கு வருவாய் அதிக அளவு குறைந்துள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில் நடப்பாண்டில் அறிவிக்கப்படும் பட்ஜெட் தாக்கல் இருக்கும் என்று சுற்றுலா துறையினர் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு பயனளிக்கும் விதமாக இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் இல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி சுற்றுலா துறைக்கு ரூபாய் 5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த ரூபாய் 5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறை 5 லட்சம் கோடி  ஒதுக்கீட்டால் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment