Connect with us

தென் தமிழக மக்களுக்கு இதமான செய்தி !! சென்னைக்கு மழைக்கு வாய்ப்பே இல்லை..

rain

செய்திகள்

தென் தமிழக மக்களுக்கு இதமான செய்தி !! சென்னைக்கு மழைக்கு வாய்ப்பே இல்லை..

தென் தமிழக மக்களுக்கு இதமான செய்தி !! சென்னைக்கு மழைக்கு வாய்ப்பே இல்லை..

தமிழகத்தில் கடந்த சில நாட்களகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே மன்னார் வளைகுடா மற்றும் தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

வருகின்ற ஏப்ரல் 8,9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும்,  ஏப்ரல் 10ம் தேதி தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இதனிடையே ஏப்ரல் 8,9 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு தென்மேற்கு வங்கக்கடல் போன்ற பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50கிமீ வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும், சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top