தென் தமிழக மக்களுக்கு இதமான செய்தி!! வானிலை மையம் தகவல்..
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் உட்பகுதி, இலங்கையை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடலின் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் நிலவுகிறது. இதன் காரணமக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வருகின்ற 8, 9, 10, 11- ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்கள், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் மிதமான மழையும், 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் திருப்பூர், கோவை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளது.
இதனிடையே சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இருப்பினும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என கூறியுள்ளது.
மேலும், மீனவர்களுக்கு தற்போது எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
