வட கடலோர மாவட்டங்களுக்கு இதமான செய்தி! இதர மாவட்டங்களுக்கு எரிச்சலான செய்தி!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் முழுவதும் அகன்றுவிட்டது. இதன் விளைவாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஏனென்றால் பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் வெயிலின் தாக்கம் அதை விட அதிகமாக இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கடலோர மாவட்டங்களுக்கு மட்டும் ஒரு இதமான செய்தி ஒன்றினை கூறியுள்ளது. அதன்படி வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பிப்ரவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய 2 தேதிகளில் வட கடலோர தமிழ்நாடு மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இருப்பினும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment