Connect with us

மாணவர்களுக்கு நற்செய்தி: வீடு தேடி வரும் உணவுகள்!

Tamil Nadu

மாணவர்களுக்கு நற்செய்தி: வீடு தேடி வரும் உணவுகள்!

64c604fda91d9c578fff1d1a92418095

மாணவர்களுக்கு வீடு தேடி வரும் உணவு என்ற நற்செய்தி வந்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஊட்டச்சத்து சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை உள்ளது 

இந்த நிலையில் இது குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது தமிழக அரசு உறுதிமொழியை கொடுத்துள்ளது. அதன்படி 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு மையங்களில் உணவுகள் தயார் செய்யப்பட்டு மதிய உணவை அவர்களுடைய வீடுகளில் சென்று வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது

இன்னும் 15 நாட்களில் இதனை செயல்படுத்த உள்ளதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்காக அங்காடி மையங்களை மீண்டும் திறக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் சத்துணவு கூடங்களில் உணவு சமைத்து மாணவர்களுக்கு வீடுகளுக்கு சென்று உணவு வழங்கும் நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக தெரிகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top