Connect with us

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு குட் நியூஸ்.. மாசமாசம் 1000 ரூபாய் ஸ்காலர்ஷிப்..!

Untitled 106

செய்திகள்

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு குட் நியூஸ்.. மாசமாசம் 1000 ரூபாய் ஸ்காலர்ஷிப்..!

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு குட் நியூஸ்.. மாசமாசம் 1000 ரூபாய் ஸ்காலர்ஷிப்..!

பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

அதாவது இந்த ஸ்காலர்ஷிப்பினைப் பெற நினைப்போர் 8 ஆம் வகுப்பு படிக்கும்போது தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைக்கான தேர்வினை எழுத வேண்டும்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு என நான்கு ஆண்டுகளுக்கும் மாதம் 1000 வீதம் ஒருவருடத்திற்கு 12,000 ரூபாய் வழங்கப்படும்.

4 ஆண்டு முடிக்கையில் மொத்தமாக ரூபாய் 48000 பெற்று இருப்பர். மேலும் இந்தத் தேர்வுக்கான கேள்வியானது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படும்.

இந்தத் தேர்வானது மார்ச் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top