ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! விரைவில் முந்துங்கள்!

ஒவ்வொரு வருடமும் தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டில் பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை ,இலவச வேஷ்டி , சேலை, ரூ.1,000 ரொக்க பணம், கரும்பு மற்றும் வழங்கப்பட உள்ளது.

முதலில் கரும்பு இல்லாத பொங்கல் தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது, அதன் பின்
சில நாட்களுக்கு முன்னதாக கரும்பு வழங்கப்படும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 2ம் தேதி முதல் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும் பணி தொடங்கப்பட்டது. அதன் பின் ஜனவரி 9ம் தேதி சென்னையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நேரில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ1000 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என தமிழக உணவுத்துறை தெரிவித்துள்ளது.

இன்று முதல் டோக்கன் இல்லாதவர்களும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பெறலாம் என அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு புதுமையான சுவையான இனிப்பு பொங்கல் செய்முறை இதோ!

இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் இத்திட்டத்தை தொடக்கி வைக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.