குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!! – என்ன தெரியுமா?

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைகளுக்கு பதிலாக பயனாளர்களுக்கு பணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி ஆட்சி தொடங்கியதில் இருந்தே குடும்ப தலைவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் தட்டாஞ்சாவடி பகுதியில் சிறப்பு அங்காடியை அம்மாநில முதல்வர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அங்கன்வாடியில் சர்க்கரை, மைதா, ரவா, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 25 பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கான தொகையை தீபாவளி பாண்டிகையை முன்னிட்டு, அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படுவதாக தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment