தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்குக்கு வந்தவுடன் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காலங்களில் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இவவச பொருட்கள் வழங்குவதில் மோசடி நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைவான அளவில் உணவு பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் எலெக்ட்ரானிக் எடை இயந்திரம் வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவற்றின் மூலம் இலவச உணவு பொருட்கள் விநியோகம் செய்வதில் உள்ள முறைகேடுகளை தடுக்கவும், இதுபோன்ற பிரச்னை மீண்டும் வரக்கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன