பனியன் கம்பெனி ஊழியர்களுக்கு குட் நியூஸ்; அடுத்த 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை!

வருகின்ற வெள்ளிக்கிழமை நம் தமிழகத்தில் தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. நம் தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாவாகவும் பொங்கல் திருவிழா காணப்படும். இதற்காக தமிழக அரசின் சார்பிலும் பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை பார்க்கின்ற மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் பொங்கல் திருநாள் பல கம்பெனிகளில் பொங்கல் போனஸ் வழங்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டு வரும். இத்தகைய இனிப்பான பொங்கல் திருநாளில்  தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அறிவித்து திருப்பூர் கம்பெனி அசத்தியுள்ளது.

அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி களுக்கு தொடர்ந்து 5 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பனியன் கம்பெனிகளில் வேலை பார்க்கின்ற ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment