சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்!! என்ன தெரியுமா?

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பாலின் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிகல் உள்ளதால் பாலின் தேவை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்  ஆவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது:

சென்னையில் தினமும் 13.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்ட  நிலையில்  தற்போது  14 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளதால் சென்னை மக்களின் தேவை அதிகரித்துள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் பால் கொள்முதல் தற்போது 35 லட்சம் லிட்டராக இருப்பதால் 28 லட்சம் லிட்டர் பால் மட்டும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த அவர் இதனை 40 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அந்த வகையில் சென்னையில் தினமும் ஓட்டல்கள், டீக்கடைகளுக்கு மற்றும் பொதுமக்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் தினமும் 15 லட்சம் லிட்டர்  விநியோகம் செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும்,   திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் லிட்டருக்கு ரூ. 3 ரூபாய் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment