விமான பயணிகளுக்கு குட் நியூஸ் !! என்ன தெரியுமா ?

புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு நாளை முதல் மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து நண்பகல் 12.05 விமானம் புறப்பட்டு பிற்பகல் 01.30 புதுச்சேரி வந்தடையும்.

பின்னர் மாலை 04.30 க்கு புறப்பட்டு மாலை 06.15- க்கு ஹைதராபாத் சென்றடையும். கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும், 2015 ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனமும் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமானசேவையை தொடங்கின.

ஆனால் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் சேவைகள் பாதியில் நிறுத்தப்பட்டன. நாட்டில் விமான சேவையை அதிகரிக்கும் வகையில் ஒன்றிய அரசு புதிய கொள்கையை அறிவித்தது.

அதன்படி உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான கட்டனத்தை பாதி ஏற்கும் என ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து தடை செய்யப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் சர்வதேச விமான சேவை நாளை தொடங்க உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment