டும்..டும்..டும்.. -க்கு ரெடியான குட்நைட் பட நடிகை : அதுக்குள்ளவா என ரசிகர்கள் செல்லக் கோபம்..!

கல்யாணம் முடிச்சா இப்படி ஒரு பொண்ணைத் தான் கல்யாணம் முடிக்கனும் என்று 90‘s கிட்ஸ்களை தனது இயல்பான நடிப்பின் மூலம் ஏங்க வைத்தவர் குட் பட நடிகை மீதா ரகுநாத். இந்த ஆண்டின் இடைப்பட்ட பகுதியில் வெளியான குட் நைட் படத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத், பாலாஜி சக்திவேல், Dr. ராய்ச்சல் போன்றோர் நடித்திருந்தனர்.

ஒரு நடுத்தரக் குடும்பத்து பையனுக்கும், பெண்ணுக்கும் இடையேயான யதார்த்தமான காதல், தனது குறட்டை பிரச்சினையால் அவனது கல்யாணத்துக்கு ஏற்படும் சிக்கல், அதன் களைவதற்காக எடுக்கும் முயற்சிகள் அவருக்குத் துணை நிற்கும் கதாநாயகி என படம் முழுக்கவே யதார்த்தங்களால் நிறைந்து வெற்றி பெற்றது.

இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்த மீரா ரகுநாத் தனது நடிப்பில் முத்திரை படைத்திருப்பார். ஒவ்வோர் ஆணும் தனக்கு இது போன்ற மனைவிதான் வேண்டும் என அவரின் நடிப்பைக் கொண்டாடினர். படம் நல்ல விமர்சனங்களால் வெற்றி பெற்றது. ‘நான் காலி‘ என்ற பாடல் இன்று பலரது ரிங்டோனாகவும் இருக்கிறது. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் வெற்றிப் படங்களின் வரிசையில் சேர்ந்தது.

பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் குவா..குவா.. அசத்தலான போட்டோ ஷுட் அப்டேட் கொடுத்த நடிகை

முதலும் நீ முடிவும் நீ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான மீதா ரகுநாத் பின்னர் குட் நைட் படத்தில் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் ஜொலிக்கப் போகிறார். தமிழுக்கு அடுத்த மீனா மாதிரியான கதாநாயகி கிடைத்துவிட்டார் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் நேற்று இவருக்கு திருமண நிச்சய தார்த்தம் நடந்துமுடிந்துள்ளது.

தனது வருங்காலக் கணவருடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மேலும் திருமணத்திற்குப் பிறகு நடிப்பைத் தொடர்வாரா என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர். ஏனெனில் திறமையாக நடிகை திருமணம் என்ற பந்தத்தில் நுழைந்தவுடன் நடிப்புக்கு முழுக்குப் போடக் கூடாது என்ற ஆதங்கம் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

ஊட்டியைச் சேர்ந்த மீதா ரகுநாத் தான் நடித்த இரண்டே படங்களின் மூலம் இளைஞர்களின் கிரஷ்ஷாக மாறினார் என்பது ஹைலைட்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.