பெண்களுக்கு ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு: மீண்டும் தொடங்கியது தாலிக்கு தங்கம்-முதலமைச்சருக்கு நன்றி;
யாரும் மறக்க முடியாது ஆட்சியாக அம்மாவின் ஆட்சி இருந்தது. அம்மா என்று மக்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல் படுத்தினார். குறிப்பாக ஜெயலலிதா ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா உணவகங்கள் தற்போதைய ஆட்சியிலும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.
அம்மாவின் மறைவிற்குப் பின்னர் மெல்ல மெல்ல பல நலத்திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதிலும் குறிப்பாக கடந்த ஆட்சியில் எதிர்பாரதவிதமாக தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தாலிக்கு தங்கம் அளிக்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மீண்டும் தொடங்கி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதன்படி அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் தொடங்கிய முதலமைச்சருக்கு பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெண்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஏராளமான பெண்கள் தாலிக்குத் தங்கம் கோரி அரசிடம் மனு அளித்திருந்தனர். நிதி இன்மையை காரணம் காட்டி அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
