மலைப்போல் சரிந்த தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச்செல்லும் நகை பிரியர்கள்..!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தமிழகத்தில் தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்து காணப்படுகிறது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 37,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி திடீர் பயணம்: பின்னணி என்ன?

அதே போல் தூயதங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து ரூ.5,144-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளி 64 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.64,000 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment