தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 5642 என விற்பனையாளர் நிலையில் இன்று இரண்டு ரூபாய் குறைந்து 5640 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6106 என்றும் ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 20 காசுகள் என்றும் விற்பனையாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை 5600 க்கும் அதிகமாக விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஏப்ரல் 18ஆம் தேதி 5650 என விற்பனை ஆகி வந்த தங்கம் விலை இன்று 5640 என ஒரு வாரத்துக்கு பத்து ரூபாய் மட்டுமே இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைவதாக இல்லை என்றும் இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகம் இருப்பதால் தங்கத்தின் விலை வரும் மாதங்களில் ஏற்றத்தில் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் தங்கத்தின் முதலீடு செய்வது பாதுகாப்பானது என மக்களின் மனதில் ஆழப் பதிந்துள்ள நிலையில் ஏராளமானோர் சேமிப்புக்காகவும் தங்கம் வாங்கி வருகின்றனர்.
மேலும் வைகாசி மாதம் திருமண மாதம் என்பதால் இந்தியா முழுவதும் ஏகப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதாகவும் எனவே தங்க நகை கடைகளில் எப்போதும் கூட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இப்போதைக்கு தான் குறைய வாய்ப்பில்லை என்றும் அதிகரிக்க தான் வாய்ப்பு என்றும் எனவே தங்கத்தில் சேமிக்கும் எண்ணம் கொண்டவர்கள் இப்போது கூட தங்கம் வாங்குவதில் தவறில்லை என்று கூறப்படுகிறது.
இன்னும் ஒரு சில வாரங்களில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6000 என்ற அளவில் உயரும் என்றும் இப்போது வாங்கினால் கூட ஒரு கிராமுக்கு 300 முதல் 400 ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தங்கம் எப்போது வாங்கினாலும் அது லாபத்தை தான் தரும் என்பது நீண்ட கால அடிப்படையில் தங்கம் எப்போதும் ஒரே சிறந்த லாபகரமான முதலீடாகவே இருக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.