விண்ணை முட்டும் தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,690 ஆக விற்பனை செய்யப்படது. அதே போல் சவரனுக்கு ரூ.120 ரூபாய் அதிகரித்து ரூ. 37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,073- ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.5,116 எனவும், ஒரு பவுன் ரூ.40,928 ஆக விற்பனையாகிறது.

இந்நிலையில் தூயதங்கத்தின் விலையும் கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,100ஆகவும் பவுனுக்கு ரூ. 40,800-ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிராம் வெள்ளி 63.20 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.63.200 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.