பெட்ரோல் – டீசல் விலையினை தொடர்ந்து தங்கம் விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி !!

உக்ரைன் – ரஷ்யா நாடுகளிக்கிடையே போர் நிலவி வருவதால் அத்தியாவசிய பொருட்கள், கச்சா எண்ணை விலை இந்தியாவில் உயரும் என கணிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து உள்ளது. இந் நிலையில் தற்போது தங்கம் விலையும் உயர்ந்துள்ளதால் இல்லதரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையானது சவரனுக்கு 280 அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையானது  ஒரு கிராம் ரூ. 4, 828 ஆகவும் சவரனுக்கு ரூ. 38,624 ஆக விற்பனையாகிறது.

அதே போல 24 கேரட் தூய தங்கத்தின் விலையானது  இன்று சவரனுக்கு 304  உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,267 ஆகவும், சவரனுக்கு  ரூ. 41,136 விற்பனையாகிறது.

மேலும் வெள்ளியின் விலையானது கிராமிற்கு 73. 40 ஆகவும் 1 கிலோவுக்கு 73,400 ஆக விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment