தங்கம் விலை உச்சம்: ஒரே நாளில் ரூ.312 உயர்வு!

4cd7ce66d81f6303493ed929076552bb

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று திடீரென சவரன் ஒன்றுக்கு 312 ரூபாய் உயர்ந்துள்ளது தங்கநகை பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூபாய் முப்பத்தி ஒன்பதும், ஒரு சவரனுக்கு ரூபாய் 312ம் உயர்ந்துள்ளது என்றும் இன்னும் உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 39 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4410.00என விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை இன்று ஒரே நாளில் 312 உயர்ந்து ரூபாய் 35280.00 என விற்பனையாகிறது

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4774.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38192.00 எனவும் விற்பனையாகி வருகிறது. மேலும் சென்னையில்  இன்று வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு 95 காசுகள் உயர்ந்து ரூபாய் 65.01 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 65010.00 என விற்பனையாகி வருகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment