Connect with us

ஒரேடியாக உயர்ந்த தங்கத்தின் விலை திடீர் சரிவு…!! இல்லத்தரசிகள் கொண்டாட்டம்;

gold rate 00

தமிழகம்

ஒரேடியாக உயர்ந்த தங்கத்தின் விலை திடீர் சரிவு…!! இல்லத்தரசிகள் கொண்டாட்டம்;

ஒரேடியாக உயர்ந்த தங்கத்தின் விலை திடீர் சரிவு…!! இல்லத்தரசிகள் கொண்டாட்டம்;

நம் தமிழகத்தில் பல நாட்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக உக்ரைன் ரஷ்யா போருக்கு பின் தங்கத்தின் விலை அதிக அளவு உயர்த்தப்பட்டது.

இதனால் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாயையும் தாண்டி விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுவும் குறிப்பாக ஒரு கிராம் தங்கத்தின் விலை 5000 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு தொடர்ந்து விலை உயர்ந்த விற்கப்பட்ட தங்கம் தற்போது குறைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தங்கம் சவரனுக்கு ரூ 304 குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் குறைந்துள்ளது.

இதனால் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4831 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 38 ஆயிரத்து 648 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ 72.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரேடியாக உயர்ந்த தங்கத்தின் விலை குறைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top