உச்சம் தொட்ட தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

உக்ரைன் ரஷ்யா போரானது கடந்த 13- வது நாளாக உக்கிரமடைந்து வருகிறது. இந்த போர் மேலும் உக்கிரமடைந்தால் பொருளாதரம் பெரிதும் பாதிக்கப்படும் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் 3- கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முடிவும் எட்டப்பட வில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கச்சாஎண்ணெய் தொடர்ந்து தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது 110 – ஆக அதிகரித்து  பவுனுக்கு 40,568 ஆகவும், கிராமிற்கு 5,071 ஆகவும் விற்பனையாகிறது.

மேலும், தூயதங்கத்தின் விலையானது பவுனுக்கு 44,256 ஆகவும், கிராமிற்கு 5, 532 ஆகவும் விற்பனையாவது இல்லதரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment