கடந்த சில நாட்களாகவே உக்ரைன் மற்றும் ரஷ்யா மீதான போர்பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இரு நாடுகளும் போர்தொடுத்தால் பொருளாதர வீழ்ச்சி ஏற்படும் என பல உலகநாடுகள் எச்சரித்து வந்தனர்.
ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா உக்ரைன் மீது பயங்கர போர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் கச்சா எண்ணெய் , பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் இன்று ஒரே நாளில் ஆபரணத்தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 1.856 உயர்ந்துள்ளது. இதனிடையே ஒரு கிராமிற்கு ரூ. 4951 ஆகவும் பவுனுக்கு ரூ. 39,608 – க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை தொடந்து வெள்ளியில் விலையானது கிடுகிடு வென உயர்ந்து கிராமுற்கு ரூ. 72.70 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.