நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!! தங்கம் விலை குறைவு..

கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் இன்றைய தினத்தில் தங்கத்தின் விலை தாறுமாறாக குறைந்துள்ளது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4, 755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல்  சவரனுக்கு ரூ.38, 040-க்கு ஆக விற்பனையாகிறது.

இதனையடுத்து தூயத்தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. தற்போது ஒரு கிராம் 5,154-ஆகவும் பவுனுக்கு ரூ. 41,232- ஆகவும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளின் விலையும் குறைந்துள்ளது. அதன் படி, இன்று ஒரு கிராம் 65.70 காசுகளாகவும் ஒரு கிலோ 65 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment