உச்சம் தொட்ட தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்கம் விலையானது தற்போது கிடுகிடுவென அதிகரித்து காணப்படிகிறது.

அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ரூ.4,680 ஆக விற்பனை செய்யப்படுகிரது. அதே போல் கிராமுக்கு ரூ.440 அதிகரித்து ரூ. 37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனையடுத்து தூயத்தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,105- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் 5,105ஆகவும் பவுனுக்கு ரூ. 40,80-ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிராம் வெள்ளி 61.50 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.61.500 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment