
தமிழகம்
உச்சம் தொட்ட தங்கம் விலை: அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தமிழகத்தில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து தங்கம் விலையும் உயர தொடங்கியது. இதனால் நகை வாங்கும் இல்லத்தரசிகள் மிகவும் கவலை அடைந்தனர். இந்த சூழலில் தற்போது தங்கம் விலையானது இன்றைய தினத்தில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஒரு கிராமுக்கு ரூ. 103 அதிகரித்து சவரனுக்கு ரூ.38, 289-க்கு ஆக விற்பனையாகிறது.
அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது கிராமுக்கு 117 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,220-ஆகவும் பவுனுக்கு ரூ. 41, 760 ஆக விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 100ரூபாய் குறைந்து, கிலோ 65,000 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
