
Tamil Nadu
எகிறும் தங்க விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4, 790 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4,774 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 16 உயர்ந்து சவரனுக்கு ரூ.38,320-க்கு ஆக விற்பனையாகிறது.
அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,209- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,225-ஆகவும் பவுனுக்கு ரூ. 41,800 ஆக விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை மாற்றமின்றி காணப்படுகின்றது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் 68.50 காசுகளாகவும் இரு கிலோ 68 ஆயிரத்து 500- ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
