Connect with us

எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை: கொண்டாட்டத்தில் இல்லதரசிகள்!!

gold rate 00

Tamil Nadu

எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை: கொண்டாட்டத்தில் இல்லதரசிகள்!!

கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் இன்றைய தினத்தில் தங்கத்தின் விலை தாறுமாறாக குறைந்துள்ளது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4, 753 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4,770 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 17 குறைந்து சவரனுக்கு ரூ.38, 024-க்கு ஆக விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5, 204- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,185-ஆகவும் பவுனுக்கு ரூ. 41,480 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் மாற்றமின்றி காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் 66 காசுகளாகவும் ஒரு கிலோ 66 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top