
தமிழகம்
தங்கம் விலை அதிரடி குறைவு: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் இல்லதரசிகள்!!!
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கடந்த சில மாதங்களாக தங்கம் விலையானது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த இரண்டு தினங்களாக தங்கம் விலையானது குறைந்து வருகிறது.
அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 4,630 ஆக விற்பனையாகிறது. அதே போல் பவுனுக்கு ரூ. 296 குறைந்து ரூ.37,040 ஆக விற்பனையாகிறது.
அதே போல் தூயதங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து ரூ. 5,050 -ஆகவும் பவுனுக்கு ரூ. 40,400 ஆக விற்பனையாகிறது.
மேலும், தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 61 காசுகளாகவும் ஒரு கிலோ 61 ஆயிரமாக விற்பனையாகிறது.
