மலைபோல் சரியும் தங்கம் விலை: குஷியில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது தாறுமாறாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை கிடுகிடுவென குறைந்துள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 8 குறைந்து ரூ.4,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 37,056 ஆக விற்பனையாகிறது.

இதனையடுத்து தூயத்தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் ஒரு கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ. 5,053- ஆக விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ. 40,424-ஆக விற்பனையாகிறது.

அதே போல் ஒரு கிராம் வெள்ளி விலை 62 ரூபாய் எனவும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.62.000 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

மேலும், வாரத்தின் முதல் நாளிலில் தங்கம் விலையானது சரிவுடன் காணப்படுவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment