இன்றும் சரிந்தது தங்கம் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

3d158553802c7d052f40b2ce72ff7911

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்திலும் இறக்கத்திலும் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்தது என்பதையும் நேற்று குறைந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது என்பதும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையை விட 10 ரூபாய் இறங்கி 4510.00 என்ற விலையிலும் ஒரு சவரன் தங்க விலை நேற்றைய விலையை விட 80 ரூபாய் குறைந்து 36080.00 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது

அதே போல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைவிட ஒரு வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் குறைந்தது என்பதும் இன்று வெள்ளி ஒரு கிராம் 73.50 ரூபாய் என்ற விலையிலும் ஒரு கிலோ என்ற ரூ.73500.00 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தங்கம் விலை இந்த வாரம் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்றும் பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் இந்தியாவிலும் வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment