Connect with us

மலைபோல் சரிந்த தங்கம் விலை: குஷியில் இல்லதரசிகள்!!

202008241054364856 Tamil News gold price decreased today SECVPF

தமிழகம்

மலைபோல் சரிந்த தங்கம் விலை: குஷியில் இல்லதரசிகள்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலையை தொடர்ந்து மற்ற பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தற்போது தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்த நிலையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது.

இதனிடையே சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4,806 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 16 குறைந்து சவரனுக்கு ரூ.38,448-க்கு ஆக விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,243 – ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,220-ஆகவும் பவுனுக்கு ரூ. 41,760 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் 67 காசுகளாகவும் இரு கிலோ 67 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகின்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top