முகூர்த்த நாட்கள் மத்தியில் தங்கத்தின் விலை குறைவு! முந்திக்கொண்டு ஓடும் மக்கள்!!

நாம் தினந்தோறும் சென்னையின் ஆபரணங்கள் மற்றும் வெள்ளியின் விலையை பார்த்துக்கொண்டு வருகிறோம். அதன் தொடர்சியாக இன்றைய தினமும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் தங்கத்தின் விலை மிகக் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள்  தங்கம் வாங்குவதற்கு ஒரு அரிய வாய்ப்புள்ள நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 128 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 128 குறைந்துள்ளது.

இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக தங்கம் ஒரு கிராம் 4514 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் சவரன் ரூபாய் 36 ஆயிரத்து 112 தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ 65.50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வாரம் முழுவதும் முகூர்த்த நாட்களாக உள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைந்தது பலருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment