சென்னையில் சரிந்தது தங்கம் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

3d158553802c7d052f40b2ce72ff7911

சென்னையில் நேற்று மாலை தங்கம் விலை திடீரென கிராம் ஒன்றுக்கு ரூபாய் 30 உயர்ந்துள்ளதை அடுத்து இன்று அதே 30 ரூபாய் இறங்கியுள்ளது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது 

சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு என்ற 4520.00 விலையில் விற்பனை ஆகி வருகிறது. நேற்று சென்னையில் ரூ.4490 என்ற விலைக்கு விற்பனை ஆனது என்பது தெரிந்ததே 

அதேபோல் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.36160.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் வெள்ளியின் விலையும் என்று ஒரு கிராமுக்கு 70 காசுகள் குறைந்துள்ளது. இன்று வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.73.40 என்றும் ஒரு கிலோ விலை ரூ.73400.00 என்றும் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் நேற்று போல் இன்றும் மாலையில் தங்கம் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை தங்கம் விலை குறைந்துள்ளதால் தங்கம் வாங்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment