Tamil Nadu
தங்கம் விலை மீண்டும் சரிவு: தங்கம் வாங்க சரியான நேரமா?
சென்னையில் தினசரி தங்கம், வெள்ளி விலை குறித்த நிலவரத்தை அவ்வப்போது நாம் பார்த்து வரும் நிலையில் கடந்த சில நாட்களில் ஒரு சில நாட்கள் தங்கம் விலை ஏறியும் ஒரு சில நாட்களில் இறங்கியும் இருப்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது, தங்கத்தின் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 15 இறங்கியுள்ளதாகவும் அதேபோல் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 120 இறங்கியுள்ளதாகவும் சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது
இதன்படி இன்றைய தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4435 எனவும் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 35,480 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.73.40 என விற்பனையாகி வருகிறது என்பதும் ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 73,400 என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
தங்கத்தின் விலை நேற்றும் இன்றும் குறைந்து வருவதால் தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என்று தங்க நகை கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்
