தங்கம் விலை அதிரடி குறைவு: கொண்டாட்டத்தில் இல்லதரசிகள்!!!

கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது.

இதனிடையே இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4, 680 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கிராமுக்கு 10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,670 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ. 37, 360 -க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,105- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,095-ஆகவும் பவுனுக்கு ரூ. 40,760 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் 62.50 காசுகளாகவும் ஒரு கிலோ 62.500 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment